கார்த்திகை விளக்கீடு

{[['']]}

கார்த்திகை மாதத்தில் தீபங்கள் ஏற்று வதில் மூன்று வகைகள் உண்டு என்று தர்ம சாஸ்தி ரம் கூறுகிறது. அவை, வீட்டு விளக்கு, குமா ராலய தீபம், சர்வாலய தீபம் என்பனவாகும். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதி களிலும் விளக்கு ஏற்றி வழிபடுதல் கார்த்திகை விளக்கீடு ஆகும். 
முருகப் பெருமான் ஆலயங்களில், தீபம் ஏற்றி வழிபடுவதும் சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவதையும் குமாராலய தீபம் என்பர். மற்றைய கோயில்களில் தீபங்கள் ஏற்றிச் சொக்கப்பனை கொளுத்துதல் சர்வாலய தீபம் எனப்படும். பாரதத்தின் தென் பகுதியில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகச் சிறப்பாக அனுட்டிக்கப்படுகி ன்றது. 
கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதி காலை பரணி தீபமும், மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகி ன்றமை வழமையான நிகழ்வாகும். 
Share this game :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Calendar - All Rights Reserved
Published by Eelanila.com